NEWS NEWS Author
Title: குடற்புழுக்களை நீக்கும் அற்புதமான உணவுகள்!
Author: NEWS
Rating 5 of 5 Des:
  வயிற்றில் குடல் பகுதியில் உருவாகும் புழுக்கள் உடல் நலனுக்கு கேடு விளைவிப்பவை. ஆனால் இவற்றை ஆரோக்கியமான இயற்கை உணவுகளை கொண்டு நீக்க முடியும...

 



வயிற்றில் குடல் பகுதியில் உருவாகும் புழுக்கள் உடல் நலனுக்கு கேடு விளைவிப்பவை. ஆனால் இவற்றை ஆரோக்கியமான இயற்கை உணவுகளை கொண்டு நீக்க முடியும். அதுகுறித்து தெரிந்து கொள்வோம்.




கற்பூரவள்ளி எண்ணெயை எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்து வர குடற்புழு நீங்கும்.

கிராம்பு இரண்டை தினசரி மென்று தின்று வர குடற்புழுக்களை அழிக்கும்.

தினமும் காலை வெறும் வயிற்றில் பச்சை கேரட்டை கடித்து சாப்பிட்டு வர குடற்புழு நீங்கும்.

ஒரு கப் புதினா சாற்றுடன், எலுமிச்சை சாறு கறுப்பு உப்பு கலந்து சாப்பிட்டு வர குடற்புழு பிரச்சினை நீங்கும்.

வெதுவெதுப்பான பாலுடன் ஆமணக்கு எண்ணெய் 2 ஸ்பூன் கலந்து குடித்தால் குடற்புழுக்கள் மலத்தில் வெளியேறிவிடும்.

தினசரி ஒரு பல் பூண்டை மென்று சாப்பிட்டு தண்ணீர் குடித்தால் குடற்புழுக்கள் அழியும்.

எலுமிச்சை விதைகளை பொடியாக்கி நீருடன் கலந்து பருக குடற்புழு நீங்கும்.

குறிப்பு: ஆரோக்கிய தகவலுக்காக வழங்கப்படுகிறது. கூடுதல் விவரங்களுக்கு மருத்துவ நிபுணரை அணுகவும்.


Advertisement

 
Top